Where Passion Fuels Programming

Modern Approach to

Ancient Actions

கிரந்த லிபிகளிலிருந்து வரும் பண்டைய இலக்கிய செல்வங்கள்

பண்டைய ஏடுகளிலிருந்து தனிப்பட்ட டிஜிட்டல் இலக்கியக் களஞ்சியத்தை உருவாக்க உதவும் ஒரு மென்பொருள்.

கையாளப்படும் மொழி கிரந்தம் ஆகும். இது தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்யப்படும்

பாரம்பரியத்தை போற்றும் வகையில் ஒரு டிஜிட்டல் களஞ்சியம் உருவாக்கப்படும்

அறிவு, பார்வைகள் மற்றும் பாரம்பரியத்தின் செல்வத்தைக் கொண்டு பயன்பெறுங்கள்.

ஏடுகள், ஆவணங்கள் மற்றும் கோயில் சுவர்கள் போன்ற பண்டைய கட்டிட அமைப்புகளை ஸ்கேன் செய்யும் வாசிப்பு இயந்திரம்.

இது தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட உரையைத்  தொகுத்து வழங்கும் திறன் கொண்டிருக்கும்

வேத பாடசாலைகள் உடனான ஒத்துழைப்பின் மூலம் மாணவர்களைத் தீர்வு கட்டமைப்பில் ஈடுபடுத்துவது குறித்து ஆராயப்படும்.

கிரந்த லிபிகளின் தொகுப்பு – கருத்தாக்க குறிப்பு

  • கிரந்த எழுத்தில் எழுதப்பட்ட உரைகளை வாசித்து, தமிழில் மொழிபெயர்ப்பு செய்யக்கூடிய தீர்வை உருவாக்குவதே இலக்கு.
  • பாரம்பரிய இலக்கியங்களைக் கொண்டு டிஜிட்டல் நூலக தளத்தை உருவாக்குவதற்கான வழிமுறையை வழங்குவதே நோக்கம்.
  • கிரந்த மொழியில் எழுதப்பட்ட இலக்கியங்களில் இருந்து அறிவைப் பெறுவதே நோக்கம்.
  • இந்த தீர்வு, கிரந்தம் கற்கும் மாணவர்களுக்கும் உதவியாக இருக்கும்.
  • இதன் மூலம் தகவல் பரவலான மக்களிடம் கிடைப்பதற்கு உதவும்.
  • கிரந்த ஞானக் களஞ்சியம் என்பது அடிப்படை எழுத்துக்கள், ஒப்படை விதிகள், இலக்கண விதிகள் ஆகியவற்றின் தொகுப்பாக இருக்கும் எதிர்காலத்தில், சூழல் சார்ந்த தகவல்கள் ஞானக் களஞ்சியத்தில் சேர்க்கப்படும்இதைக் கொண்டு, அவற்றை தமிழில் மொழிபெயர்த்து வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும் . உரையை வாசிக்கும் போது காணாமல் போன சொற்கள் / எழுத்துக்களுக்கான பரிந்துரை இயந்திரமாக செயல்படக்கூடிய செயற்கை நுண்ணறிவு கோட்பாடுகளைப் பயன்படுத்துவது எதிர்கால இலக்காக இருக்கும்.     
  • பல்வேறு ஆதாரங்களில் இருந்து உரையை ஸ்கேன் செய்வது மொபைல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யப்படும். உரை புத்தகங்கள், கையால் எழுதப்பட்ட ஏடுகள், கோவில் சுவர்கள், ஓலைச்சுவடிகள் மற்றும் பிற இடங்களிலும் கிடைக்கக்கூடும். மேற்கூறிய தரவு மூலங்கள் முழுவதும் ஸ்கேனிங் வசதியை உருவாக்க எதிர்காலத்தில் முயற்சி மேற்கொள்ளப்படும் . கணினி சேமிப்பக தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, உரையை தமிழில் வழங்க மொபைல் தளமும் பயன்படுத்தப்படும்.
  • தரவு சேமிப்பு மற்றும் தகவல் தொடர்பு / API இணைப்பு கூறுகள் மற்றும் பிற இணைய சேவையகங்கள் ஆகியவற்றிற்கு இணைய அடிப்படையிலான முறைகள் பயன்படுத்தப்படும்.
  • மொபைல் தளங்களில் இருந்து தகவலைப் பெற்று, மொழிபெயர்ப்பு விதிகளைப் பயன்படுத்தும் இயந்திரம், மென்பொருள் கூறுகளின் கீழ் குழுப்படுத்தப்படும் இந்த SDKகள் / மென்பொருள் கூறுகள் கிரந்த உரையை தமிழாக மாற்றுவதற்கான திறனை கொண்டிருக்கும். எதிர்காலத்தில், பல்வேறு அளவிலான சிக்கல்களைக் கையாள்வதற்கான செயற்கை நுண்ணறிவு திறனை இயந்திரத்திற்கு சேர்க்கப்படும்.