பாரம்பரிய கலைகளுக்கான தோழர்

கருத்து
இது திறன் கொண்ட கருவிகளின் தொகுப்பு. இதன் நோக்கம் பாரம்பரிய கலை நுட்பங்களைப் போன்று உருவாக்குதல்.
முதல் கட்டமாக தரையில் கோலம் வரைய முயற்சி செய்யப்படும்.
எதிர்காலத்தில், இந்த மென்பொருள் கட்டமைப்புகளின் விரிவாக்கம் இருக்கும். இது மேலும் பல டிஜிட்டல் உதவியாளர்களை உருவாக்குவதை எளிதாக்கும். இது பாரம்பரிய கலைகளைச் செய்யவும். விளையாட்டுகளை விளையாடவும் திறன் கொண்டிருக்கும். எ.கா., கோலி மற்றும் பல்லாங்குழி விளையாடுதல் அல்லது கற்சிலை வடித்தல் போன்றவை.

தீர்வு கண்ணோட்டம்
கலை மாதிரிகளில் இருந்து பெறப்பட்ட கட்டளைகளை செயல்படுத்துவதன் மூலம் இந்த கருவி இயங்கும் இந்த செயல்படுத்தும் கட்டளைகள் இணையம் சார்ந்த முறைகளில் சேமிக்கப்படும். இது மொபைல் சாதனத்தால் வழங்கப்படும் கட்டளைகளை கடைப்பிடிக்கும்.
கலைத்துறையில் தேர்ச்சி பெற்ற திறமைகளை உருவாக்கும் திறனை விரிவாக்குதல் நோக்கமாகும்.
புதுமையான மாதிரிகளின் வளர்ச்சியும், அவற்றை பெருமளவில் உருவாக்கும் திறனும், பரவலான மக்களைச் சென்றடைய உதவும்.

திட்ட செயல்படுத்தல் முறை
மென்பொருள் கூறுகள் மற்றும் மோட்டார்கள், பெல்ட்கள் ஆகியவற்றைக் கொண்ட தொகுப்பு, ஓவியம் வரைவதற்கான திறனை வழங்கும்.
இந்த தளம் மாதிரிகளையும், செயல்பாட்டு முறைகளையும் உருவாக்குவதை சாத்தியமாக்கும். இந்த வளங்களுடன் ஒரு மொபைல் பயன்பாடு தொடர்பு கொண்டு, தேவையான கலையை உருவாக்க உதவும்.


கோலம் கலைத்தோழர் – கருத்தாக்க குறிப்பு
- கோலம் போன்ற பாரம்பரிய கலைப்படைப்புகளை உருவாக்கும் ஒரு கருவியை உருவாக்குவதே நோக்கம்.
- பாரம்பரிய உணர்வை ஒரு கலைப்படைப்பு மூலம் கொண்டு வருவதே முயற்சி.
- கருவி மூலம் கோலம் போட்டு பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும்.
- மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய வேலையை ஒரு ரோபோ செய்துவிட முடியுமானால், அரிய திறன் கொண்ட தொழிலாளர் தேவை குறைக்கப்படலாம்.
- இது பாரம்பரிய கலைப்படைப்புகளை பெரிய அளவில் பரவலாக்குவதற்கும் உதவும்.

தரையில் படம் வரையும் 2D (இரு பரிமாண) வரைபட கணினி ஒன்றைக் கட்டுவதே அணுகுமுறை. இது ஒரு வகையான CNC இயந்திரத்தை போல செயல்படுத்த முயற்சி. இந்த இயந்திரத்தின் செயல்பாடு Arduino போன்ற கணினிகள் மற்றும் G-Code என்ற மொழி மூலம் கட்டுப்படுத்தப்படும். இதில் நான்கு முக்கிய பாகங்கள் இருக்கும்.
- இயந்திர பாகங்கள் பிரிவில் அரிசி மாவு கொட்டுவதற்கான டிஸ்பென்சர்கள், தண்டுகள் மற்றும் சக்கரங்கள் போன்ற அமைப்புகளை நகர்த்துவதற்கான DC மோட்டார்கள், அமைப்பைச் சுற்றி நகர்த்துவதற்கும் பிற இயக்க செயல்பாடுகளுக்கான பொருட்கள் ஆகியவை அடங்கும்.
- போர்டுகள் மற்றும் கட்டுப்பாட்டு சாதனங்கள் பிரிவில் Arduino, Raspberry PI போன்ற கணினி, steppers மோட்டார் போன்றவை உள்ளன. தேவையான செயல்பாடுகளை உத்தரவிடுவதற்கான மொழியாக G-Code (ஜியோமெட்ரிக்) இருக்கும்.
- மொபைல் மற்றும் இணைய அடிப்படையிலான கணினி குழுமம் தேவையான தரவு சேமிப்பகங்கள், கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு கூறுகளை கொண்டுள்ளது.
- மென்பொருள் கூறுகள் பிரிவில் கலை வழிமுறைகள், தூண்டுவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தொடர்பு கொள்வதற்கான மொபைல் செயலி, மற்றும் பிற ஒருங்கிணைப்பு கூறுகள் ஆகியவை அடங்கும்.